2016 ஆம் ஆண்டு, பிரேசிலின் அப்போதைய அதிபராக இருந்த தில்மா ரூசெப் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அதிபராக மிச்சல் டெமர் பதவியேற்று கொண்டார்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரேசில் முன்னாள் அதிபருக்கு பிணை!
ரியோ டி ஜெனிரோ: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரேசில் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜெயிர் போல் சன்னாரோ வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். இதற்கிடையே, கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக மிச்சல் டெமர் மீது வழக்கு பதியப்பட்டது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்ததையடுத்து மிச்சல் டெமர்உள்பட ஏழு பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, கடந்த 21 ஆம் தேதி டேமர் உள்பட ஏழு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து இன்று சிறையிலிருந்து அவர் வெளியேறினர்.