அமெரிக்க அதிபர் யார் என்பதில், ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய மாகாணங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. . இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜோ பிடன் 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். ட்ரம்ப் 214 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதுவரை ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 என பதிவாகியுள்ளது. இது 2008ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இதுமட்டுமின்றி, அதிபர் ட்ரம்ப் 2016இல் பெற்ற வாக்குகளையும் எளிதாக முந்தியுள்ளார்.
அதிபர் தேர்தல்: ஒபாமாவின் சாதனையை ஊதித்தள்ளிய பிடன்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள அதிபர் வேட்பாளர் என்ற சாதனையை ஜனநாயக கட்சி ஜோ பிடன் பதிவு செய்துள்ளார்.
மேலும், பிடனைபோல் அதிபர் டொனால்டு ட்ரம்பும் இதுவரை 67,567,559 (48%) வாக்குகள் பெற்றுள்ளார். எனவே, அவரும் ஒபாமாவின் இமாலய சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. கிடைத்த தகவலின்படி, ஆரம்பகால வாக்களிப்பு மற்றும் மெயில்-இன் வாக்குகள் மூலம் 100 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பெறப்பட்ட நிலையில், குறைந்தது 23 மில்லியன் வாக்குகள் இன்னும் கணக்கிட உள்ளது எனத் தெரிகிறது.
மக்களின் வாக்குகள் ஜோ பிடனுக்கு குவிந்திருந்தாலும், அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் முறை வித்தியாசம் என்பதால், அதிபராக வளம் வருவது யார் என்ற பரபரப்பு ஓய்ந்தபாடில்லை.