தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 27, 2020, 1:41 PM IST

ETV Bharat / international

'மனித உரிமை மீறலை ட்ரம்ப் தடுக்கத் தவறிவிட்டார்' -  அமெரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

வாஷிங்டன்: டெல்லி கலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொறுப்பற்ற முறையில் பதிலளித்து, மனித உரிமையைப் பாதுகாக்க தவறிவிட்டதாக அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் பெர்னி சான்டர்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

bernie sanders
bernie sanders

இதுதொடர்பாக ட்விட்டரில் பெர்னி சான்டர்ஸ் பதிவு ஒன்றையிட்டிருந்தார். அதில் , "20 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். (டெல்லியில்) இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த (அமெரிக்க அதிபர்) ட்ரம்ப், அந்தக் கலவரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என (பொறுப்பற்ற முறையில்) பதிலளித்துள்ளார். இதன்மூலம், மனித உரிமை மீறலை அவர் தடுக்கத் தவறிவிட்டார்" என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி வட- கிழக்குப் பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கடந்த திங்கள் அன்று வன்முறையாக வெடித்தது. இரண்டு நாட்கள் தொடர்ந்த இந்த வன்முறையில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, "சம்பவம் குறித்து நான் கேள்விப்பட்டேன். அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பேசவில்லை. இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை" எனக் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் கருத்தை விமர்சிக்கும் விதமாகவே பெர்னி சான்டர்ஸ் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், ட்ரம்ப்பை எதிர்த்து பெர்னி சான்டர்ஸ் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 'டெல்லி கலவரத்தைப் பொறுப்புடன் கையாளுங்கள்' - ஐ.நா. பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details