இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவிலுள்ள ரிட்ஜெக்ரெஸ்ட் என்ற இடத்திலிருந்து வடகிழக்கில் 11 மைல் தொலைவில் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட ஐந்து மடங்கு பெரியதாகும்.
கலிபோர்னியாவில் பயங்கர நிலநடுக்கம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் பயங்கர நிலநடுக்கம்!
இதன் காரணமாக ரிட்ஜெக்ரெஸ்டில் பல இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டன, மேலும் சுமார் 2,000 பேர் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது பல கட்டங்களாக நில அதிர்வுகளை உணரச் செய்துள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது.