வட அமெரிக்காவிலுள்ள கனடா, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.
87 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா சட்டப்பேரவையில் புதிய ஜனநாயகக் கட்சி 55 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. லிபரல் கட்சி 29 இடங்களிலும் க்ரீன் கட்சி மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது.
இத்தேர்தலில், புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 55 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.