தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

370 மில்லியன் பழங்குடியின மக்களின் நலன் பாதிப்பில் உள்ளது

நியூயார்க் : கோவிட்-19க்கு எதிராக உலகெங்கிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பழங்குடி மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புதிய ஆய்வொன்றில் வெளியாகியுள்ளது.

By

Published : May 22, 2020, 7:37 PM IST

370mn indigenous people in 90 countries lack COVID-19 health efforts
370 மில்லியன் பழங்குடியின மக்களின் நலன் பாதிப்பில் இருக்கிறது!

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் காரணமாக இதுவரை 213 நாடுகளைச் சேர்ந்த 52 லட்சத்து 17ஆயிரத்து 398 பேர் பாதிக்கப்பட்டும், 3 லட்சத்து 35ஆயிரத்து 58 பேர் உயிரிழந்தும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

நாளுக்குநாள் அதிகரித்துவரும் அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அதிக கவனம் செலுத்திவரும் வேளையில், கோவிட்-19க்கு பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கும் பழங்குடி மக்கள் அவற்றில் விலக்கப்பட்டுள்ளாதாக கருதப்படுகிறது.

உலக வங்கியின் கூற்றுப்படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் 370 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற அதிக வருவாய் உள்ள நாடுகளில் கூட, தனிநபர் தொற்று வீதத்தை கவனத்தில் கொண்டு பார்த்தால் நவாஜோ போன்ற பழங்குடி குழுக்கள் கோவிட்-19 காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவ ஆய்வுகளின் மூலமாக வெளிவரத் தொடங்கியது உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

இதனையடுத்து, பழங்குடி மக்கள் மத்தியில் பரவிவரும் கோவிட் -19 தாக்கத்தை தணிப்பதற்கான ஒரு ஏற்பாட்டை மானுடவியலாளர்கள், மருத்துவர்கள், பழங்குடித் தலைவர்கள் கூட்டிணைந்து உருவாக்க முனைந்துள்ளதாக தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.

பரந்த பார்வையாளர்களை அடைய, ஆசிரியர்கள் தங்கள் ஆய்வறிக்கையை ஆங்கிலத்தில் மட்டுமல்ல, பழங்குடி மக்கள் வசிக்கும் நாடுகளில் பேசப்படுகிற ஸ்பானிஷ், போர்த்துகீசியம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்.

இதனை பொலிவியா நாட்டின் அமேசான் பகுதியில் உள்ள பழங்குடி மக்களான சிமனே மக்களிடையே பணியாற்றிவரும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மைக்கேல் குர்வென் மற்றும் சாப்மேன் பல்கலைக்கழகத்தின் ஹில்லார்ட் கப்ளன் ஆகியோரால் வகுக்கப்பட்ட செயல் வடிவங்களில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து பேசிய கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மைக்கேல் குர்வென் கூறுகையில், “காசநோய், மூச்சுக்குழாய் அழற்சி, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் காரணமாக பழங்குடி சமூகங்கள் கூடுதல் ஆபத்தில் உள்ளன. அம்மக்களின் உடலில் உள்ள நோயெதிர்ப்பு தன்மை. கிராமப்புறங்களில் சுகாதார நிலையங்கள், அணுகல் வழி, மருந்துகள், பிற சிகிச்சைகள் போன்ற வளங்கள் மிகவும் குறைவாக இருப்பது என பல காரணங்கள் உள்ளன.

மொழி மற்றும் பண்பாட்டு அசைவுகளுக்கும் அடையாளத்திற்கும் அவர்கள் தரும் முக்கியத்துவம், நம்புகின்ற கொள்கை இவற்றை கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாதிப்பதாக அவர்கள் கருதுவதும் இங்கே கவனிக்கத்தக்க பங்கு வகிக்கிறது.

370 மில்லியன் பழங்குடியின மக்களின் நலன் பாதிப்பில் இருக்கிறது!

பழங்குடி மக்கள், பழங்குடி தலைவர்கள், விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் பழங்குடி மக்களுடன் பணிபுரியும் அரசு சாரா தொண்டு நிறுவன அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் உள்ள பழங்குடித் தலைவர்களை எங்களில் பாதுகாப்பு அறிவுறுத்தல் பணிகளில் இணைக்க உள்ளோம்”என்றார்.

இதையும் படிங்க :10 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குப் பறக்கும் அமெரிக்க வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details