மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான மாலியில், ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் பவுபாக்கர் கெய்ட்டா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது, மாலி நாட்டின் அதிபராக பா டாவ் (Bah Ndaw), பிரதமராக மொக்தார் உவானே (Moctar Ouane) பதவி வகிக்கின்றனர்.
மாலி நாட்டின் அதிபர், பிரதமர் கைது - ராணுவம் அதிரடி!
பமாகோ: மாலி நாட்டின் அதிபர், பிரதமரை அந்நாட்டின் ராணுவம் அதிரடியாகக் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று(மே.24) நடைபெற்ற அமைச்சரவைச் சீரமைப்புக் கூட்டத்தில், ராணுவத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அந்நாட்டு ராணுவ அலுவலர்கள், அதிபர், பிரதமர், ராணுவ அமைச்சர் சொலேமான் டவ்கோர் ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட மூவரும், அந்நாட்டின் பெரிய நகரான கட்டியிலுள்ள ராணுவத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மூவரையும் உடனடியாக விடுவிக்கக்கோரி, அந்நாட்டில் உள்ள ஐநாவின் மாலியின்மினுஸ்மா மிஷன் அமைப்பு கோரியுள்ளது.