ஆப்பிரிக்கா கண்டத்தின் தென் பகுதிகளான ஜிம்பாப்வே, மொசாம்பிக், மாலாவீ ஆகிய நாடுகளில் மார்ச் மாதம் வீசிய 'இடாய்' புயலால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தற்போது ஆப்பிரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் 'கெனத்' என்னும் புதிய புயல் வீசிவருகிறது.
இதன் காரணமாக, நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சில பகுதிகளில் இடுப்பளவைத் தாண்டி தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அங்கிருக்கும் மக்களை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமீப காலங்களில் கெனத்தைப் போன்று அதி தீவிரமான புயல்களை மொசாம்பிக் கண்டதில்லை. இதனால் அந்நாட்டு மக்கள் பீதியில் உள்ளன.
ஆறு வாரங்களுக்கு முன்பு, மொசாம்பிக்கில் வீசிய இடாய் புயலால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இடாய் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளே அதிக உயிரிழப்புக்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.