ஆப்பிரிக்கா கண்டத்தின் தென் பகுதிகளான ஜிம்பாப்வே, மொசாம்பிக், மாலாவீ ஆகிய நாடுகளில் மார்ச் மாதம் வீசிய 'இடாய்' புயலால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது ஆப்பிரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் 'கெனத்' என்னும் புதிய புயல் வீசிவருகிறது.
மொசாம்பிக் நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை, 220 கி.மீ. அசுரவேகத்தில் பலத்த மழையுடன் கூடிய புயல் வீசியது. தொடர்ந்து அங்கு மழை பெய்துவருவதால், அங்கிருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் புயலால் ஆயிரத்து 600 மி.மீ. அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றவரும் என்றும், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு 15 நாட்கள் வரை உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்திசெய்யும் அளவிற்குக் கையிருப்பு உள்ளது என்றும் மொசாம்பிக் தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.