தமிழ்நாடு

tamil nadu

தனுஷின் 'வாத்தி' படத்தின் 2-வது சிங்கிள் வெளியானது!

By

Published : Jan 17, 2023, 8:42 PM IST

நடிகர் தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் 2-வது பாடலான நாடோடி மன்னன் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷின் 'வாத்தி' படத்தின் 2வது சிங்கிள் வெளியானது!
தனுஷின் 'வாத்தி' படத்தின் 2வது சிங்கிள் வெளியானது!

சென்னை:இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு ’நானே வருவேன்’ என்ற படம் வெளியானது. அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனால் இந்த ஆண்டு எப்படியாவது வெற்றிப் படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கில் தனுஷ் உள்ளார். ’வாத்தி’ படம் இவருக்கு கட்டாயம் வெற்றியைத் தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த பாடலான ’நாடோடி மன்னன்’ என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார்.

இதையும் படிங்க:'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஷூட்டிங்'; 'அற்புத உள்ளம் கொண்டவர்' எனப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா!

ABOUT THE AUTHOR

...view details