"சண்டக்கோழி-2" திரைப்படத்துக்குப் பிறகு, இயக்குநர் லிங்குசாமி "தி வாரியர்" என்ற படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நாயகனாகவும், நடிகர் ஆதி பினிசெட்டி வில்லனாகவும், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
அக்ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தென்னிந்திய சினிமாவின் மறக்கமுடியாத போலீஸ் கதைகளில் ஒன்றாக இப்படம் இருக்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில், ஸ்ரீனிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். ராம் பொதினேனி போலீஸ் அதிகாரியாக, துப்பாக்கி ஏந்தியபடி காட்சியளித்த போஸ்டர் ஒன்று அண்மையில் வெளியானது.