இந்தியாவில் முன்னணி இயக்குநராக, நடன இயக்குநராக கொடிகட்டிப்பறந்தவர் தான் பிரபுதேவா. இன்று இவரை கண்டுகொள்ளக்கூட ஆள் இல்லாமல் தனி ஆளாக சுற்றிக்கொண்டிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக இவருக்கு வெற்றிப் படங்கள் எதுவும் இல்லை.
இவர் இயக்கிய சில இந்திப்படங்களும் தோல்வியடைந்தன. இதனால் இவர் படம் இயக்குவதும் இல்லை. பாடலுக்கு நடனம் மட்டுமே அமைத்துக்கொண்டிருக்கிறார். தற்சமயம் இவர் நடித்து தமிழில் எந்தப்படங்களும் வெற்றி பெறவில்லை. அதனால் இவர் மார்க்கெட் கீழே சென்றுள்ளது.
ஆனாலும் இவர் நடித்து தமிழில் ’யங்- மங்- ஜங்’, ’ஊமை விழிகள்’, ’ரேக்ளா’, ’லக்கி மேன்’, ’முசாசி’ என்று தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இவருக்கு மார்க்கெட் இல்லாததால் இவர் படங்களை வெளியிட அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகின்றன.