நியூயார்க்: ஹாலிவுட் திரையுலகில் "டை ஹார்ட்" படம் மூலம் மாபெரும் வரவேற்பை பெற்ற நடிகர் புரூஸ் வில்லிஸ். 67 வயதான நிலையிலும் பல்வேறு படங்களில் நடத்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனிடையே சிகிச்சையளிக்க முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவரது உடல்நிலை மோசமாகியதாகவும், மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் ஊடகங்களுக்கு நேற்று (பிப். 17) விளக்கம் அளித்துள்ளனர். அதில், புரூஸ் வில்லிஸூக்கு ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா என்னும் அறிய வகை நோய் இருப்பது கடந்தாண்டு கண்டறியப்பட்டது.
இது எங்களை மிகவும் வேதனைப்படுத்தியது. ஏனென்றால், இந்த ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா நோய்க்கு சிகிச்சைகள் கிடையாது. இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய பிறகு பாதிக்கப்பட்டவரின் ஆயுட்காலம் 7 முதல் 13 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.