தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

பிரதமர் மோடி சிறுபான்மையினரின் நண்பர்...! ஓபிஎஸ் புகழாரம்

தேனி: மோடியின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் மதக்கலவரம் எங்கும் ஏற்படவில்லை. மேலும் சிறுபான்மையினரின் நண்பர்தான் பிரதமர் என்று ஓபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

தேனியில் பிரிதமர் மோடிக்கு ஓபிஎஸ் புகழாரம்!

By

Published : Apr 14, 2019, 8:14 AM IST

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேனியில் பரப்புரை மேற்கொண்டார். இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விலக்குப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தனர்.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 'நடக்கவிருக்கும் தேர்தல் நன்மைக்கும் தீமைக்குமான தேர்தல். கடுமையான சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்தான் நமது பிரதமர் மோடி. அவருடைய ஆட்சியில் மதக்கலவரம் நடைபெறவில்லை. சிறுபான்மை இனத்தவர்களின் நண்பர்தான் நமது பிரதமர். உலக அளவில் கம்பீரமாக வலம்வருபவரும் கூட. மோடியின் அரசும், தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மக்களுக்கு நன்மைகளைக் கொடுக்கும் கூட்டணி.

2004 முதல் 2014 வரை திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளில் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது. 60 கோடி ரூபாய் செலவில் கோதாவரி கிருஷ்ணா நதிநீர் திட்டத்தை ஏற்படுத்திய அரசுதான் மோடி அரசு.

கூடா நட்பு கூட்டணி தான் திமுக-காங்கிரஸ் கூட்டணி. அது நமக்கு கேடு தான் விளைவிக்கும்' என்று தெரிவித்தார்.

தேனியில் பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details