வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 1916 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் விவரங்களை பொருத்தும் பணி இன்று துவங்கியது. சின்னங்கள் பொருத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
ராமநாதபுரம்: வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் 23 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 24 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டது. இதன் பிறகு, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தங்களது சின்னத்திற்கு வாக்களித்து சரி பார்த்துக் கொண்டனர். மேலும், பணி முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு நாளுக்கு முன் அந்தந்த பகுதிக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.