தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் கட்சி அனைத்தும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முத்துலட்சுமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பாஜக அரசு கல்விக் கொள்கையை அழித்துவிட்டது - ஆம்ஸ்ட்ராங் குற்றாசாட்டு
பெரம்பலூர்: பாஜக அரசு கல்விக் கொள்கையை சீரழித்துவிட்டது என தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றாசாட்டியுள்ளார்.
பாஜக அரசு கல்விக் கொள்கையை அழித்துவிட்டது - ஆம்ஸ்ட்ராங் குற்றாசாட்டு
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அங்கிருந்த அம்பேத்கர் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது பேசிய ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் வாக்களிப்பதற்கு மதிப்புக் கொடுக்கும் ஒரே கட்சி பகுஜன் சமாஜ் கட்சி. மேலும், ஐந்து ஆண்டு கால பாஜக அரசு கல்விக் கொள்கையை அழித்துவிட்டது என்றார்.