தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

ரஃபேலில் ஊழல் நடந்துள்ளதாக உச்சநீதிமன்றம் ஒத்துக்கொண்டுள்ளது - ராகுல் காந்தி

லக்னோ: ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததை உச்சநீதிமன்றமே ஒத்துக்கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

By

Published : Apr 11, 2019, 7:38 PM IST

ரஃபேலில் ஊழல் நடந்துள்ளதாக உச்சநீதிமன்றம் ஒத்துக்கொண்டுள்ளது - ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தன் சொந்தத் தொகுதியான அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததை உச்சநீதிமன்றமே ஒத்துக்கொண்டுள்ளதாகவும், அதில் மோடிக்கு பங்கு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ரூபாய் 30,000 கோடியை மோடி இந்திய விமானப் படையிடமிருந்து திருடி அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளதாகவும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நாட்டு மக்கள் ரஃபேல், ஊழல், பணமதிப்பிழப்பு, அமித் ஷாவின் மகன் ஆகியோரை பற்றி அறிய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுக் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமன் கூறுகையில், ராகுல் காந்தி உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஒரு வரிக் கூட வாசிக்கவில்லை எனவும், தீர்ப்பில் ராகுல் காந்தி சொல்வது போல் எதுவும் கூறவில்லை என்றார். முன்னதாக, உச்சநீதிமன்றம் ரஃபேலில் ஊழல் இருந்தால் அதுப்பற்றி விசாரிக்கப்படும் எனக் அறிவித்தது.

ABOUT THE AUTHOR

...view details