தேர்தல் முழுவதும் தேசியவாதம், தேசிய பாதுகாப்பு போன்ற பிரச்னைகளுக்கு பாஜக முன்னுரிமை கொடுத்து பரப்புரை செய்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சிக்கரில் இன்று மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் என்ன தெரியுமா? - காங்.கிற்கு மோடி கேள்வி!
ஜெய்ப்பூர்: ஆறு முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தினோம் எனக் கூறும் காங்கிரஸ் கட்சிக்கு அதன் பொருள் கூட தெரியாது என மோடி ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பரப்புரையில் விமர்சித்துள்ளார்.
மோடி
அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சி நடத்தியதாக கூறும் ஆறு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கள் பற்றி பயங்கரவாதிகள், பாகிஸ்தான், ஏன் இந்தியர்களுக்கே அந்த தாக்குதல் பற்றி தெரியாது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எங்களை முதலில் விமர்சித்தது. பிறகு, நாங்களும் செய்தோம் என கூச்சலிடுகிறது" என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் ஆறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியது குறிப்பிடத்தக்கது