ஏழு கட்டமாக மக்களவைத் தேர்தல் மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே இந்த மாநிலத்தில் வன்முறை நடந்து பல வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடந்தது. உச்சக்கட்டமாக பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட சாலை பரப்புரையில் கலவரம் வெடித்தது. இந்நிலையில் இன்று தேர்தலில் வாக்கு செலுத்திவிட்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
'மக்களை பாஜகவினர் துன்புறுத்தும் வீடியோக்கள் ஊடங்கங்களிடம் உள்ளது..!' - மம்தா
கொல்கத்தா: "மத்திய பாதுகாப்பு படைகள் மேற்கு வங்க மக்களை துன்புறுத்தும் வீடியோக்கள் ஊடங்களிடம் உள்ளது" என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
mamta banerjee
அப்போது அவர் கூறுகையில், "மத்திய பாதுகாப்பு படைகள் பொதுமக்களை முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களை துன்புறுத்தியுள்ளனர். மாற்று திறனாளிகளை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் சுட்டு விடுவோம் என்று மக்களை, பாதுகாப்பு படைகள் மிரட்டியுள்ளது. மக்கள் மிரட்டப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் ஊடகங்களிடம் உள்ளது" என்றார்.
இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.