மயிலாடுதுறை:சீர்காழி நகர் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பான புகாரின் பேரில், 20 நகராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவை அமைத்து சீர்காழி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளைப் பிடிக்குமாறு நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், 20க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், பன்றி வளர்ப்போருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இருதரப்பையும் காவல் துறையினர் முன்னதாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அப்போது, காவல் நிலையம் எதிரே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.
இதில், பன்றி வளர்க்கும் தரப்பைச் சேர்ந்த ஒருவர் நகராட்சி ஊழியர் சங்கிலி கருப்பன் என்பவரை கத்தியால் குத்தியதில் அந்நபர் காயமடைந்தர். தொடர்ந்து சத்தம் கேட்டு அங்கு வந்த காவலர்கள், காயமடைந்த ஊழியர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நான்கு பேரை இதுதொடர்பாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சொத்து விவகாரம் - எதிர்தரப்பினருக்கு ஆதரவாக முதியவரை மிரட்டும் போலீஸ்!