தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் மேலும் ஒருவர் கைது!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் மேலும் ஒருவரை தனிப்படை காவல்துறையினர் ஹரியானாவில் கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்துள்ளனர்.

ஏடிஎம் கொள்ளை
ஏடிஎம் கொள்ளை

By

Published : Jun 29, 2021, 6:51 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையங்களை குறிவைத்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் செலுத்தும் இயந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருந்தனர்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை வைத்து சென்னை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் அம்மாநிலத்திற்கு சென்றனர்.

இந்த கொள்ளை வழக்கில், அமீர், விரேந்தர் என்பவர்களை தனிப்படை காவல்துறையினர் ஹரியானாவில் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து தொடர் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களைத் காவல்துறையினர் திரட்டி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் நஜிம் உசைன் என்பரை டெல்லியில் தனிப்படை காவல்துறையினர் இன்று(ஜூன்.29) கைது செய்துள்ளனர்.

இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை: கொள்ளையனை திருடச் சொல்லி வீடியோ எடுத்த காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details