கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார்.
இதுசம்பந்தமாக வங்கி மேலாளர் சிசிடிவி காட்சிகளுடன் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் இளைஞரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சின்னத்துறை பகுதியை சேர்ந்த அபின் என்ற வினோத் (24) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.
விசாரணையில் அந்த இளைஞர், "திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தபோது பணம் இல்லாமல் இருந்ததது. பலமுறை இது போன்று ஏமாறியுள்ளனேன். அதனால்தான் ஆத்திரமடைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சேதபடுத்தினேன்" என வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
'பல முறை ஏமாந்துள்ளேன் அதான் ஒரே போடாக போட்டேன்' - இளைஞர் வாக்குமூலம்
கன்னியாகுமரி: "பலமுறை பணம் எடுக்க வந்தபோது இங்கு பணம் இல்லை. அதனால்தான் ஆத்திரமடைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தேன்" என்று இளைஞர் ஒருவர் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
'பல முறை வந்து ஏமாந்துள்ளேன். அதா.. ஒரே போடாக போட்டேன்' - இளைஞர் வாக்குமூலம்