தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சட்டவிரோத கால்நடைகள் கடத்தல்; ஐபிஎஸ் அலுவலர்களுக்கு சிபிஐ சம்மன்!

சட்டவிரோத கால்நடைகள் கடத்தல் விவகாரம் தொடர்பாக பதிலளிக்க ஐபிஎஸ் அலுவலர்கள் இருவருக்கு சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

CBI summons two IPS officers cattle smuggling case illegal cross-border cattle smuggling case சட்டவிரோத கால்நடை கடத்தல் கடத்தல் சிபிஐ
CBI summons two IPS officers cattle smuggling case illegal cross-border cattle smuggling case சட்டவிரோத கால்நடை கடத்தல் கடத்தல் சிபிஐ

By

Published : Mar 6, 2021, 12:35 PM IST

Updated : Mar 6, 2021, 2:59 PM IST

கொல்கத்தா: எல்லைப் பகுதியில் நடைபெற்ற கால்நடைகள் கடத்தலைத் தடுக்கத் தவறிய மாவட்ட காவல்துறை மூத்த அலுவலர்கள் கல்லோல் கனாய், அன்சுமன் சகா ஆகியோர் திங்கள்கிழமை (மார்ச் 8) சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டுள்ளது.

சர்வதேச கால்நடைக் கடத்தல் கும்பலிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கால்நடைகள் கடத்தலுக்கு துணை போனதாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மற்றும் சுங்க அலுவலர் உள்பட நால்வர் மீது கடந்தாண்டு செப்டம்பர் 21ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 34க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படைத் தளபதி (கமாண்டர்) சதீஷ் குமார், கால்நடைகள் கடத்தல்காரர் முகம்மது எனமுல் ஹக் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது கல்லோல் கனாய், அன்சுமன் சகா ஆகியோர் திங்கள்கிழமை (மார்ச் 8) சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டுள்ளது.

Last Updated : Mar 6, 2021, 2:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details