பாட்னா: பிகாரின் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் அமியவார் கிராமத்தில், அராஹ் கால்வாய் மீது 60 அடி தூரத்திற்கு கடந்த 1972ஆம் ஆண்டில் இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது பாலம் பலவீனமடைந்துவிட்டதால் பயன்பாட்டிற்கு உகந்தது இல்லை.
ஆபத்தானது என அறிவிக்கப்பட்டது. இதனால், அந்த பாலத்தில் யாரும் நடந்து செல்வது இல்லை. அருகில் கட்டப்பட்ட புதிய பாலத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் பாலத்தை கடந்த 3 தினங்களாக தீவிர முயற்சி மேற்கொண்டு திருடர்கள் திருடிச் சென்று கிட்டத்தட்ட 500 கிலோ வரை கொள்ளையடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவலர்கள் தரப்பில், “திருடர்கள், மூன்று நாட்களாக கேஸ் கட்டர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் பாலத்தை இடித்து அள்ளி சென்றனர்” என்றனர். மேலும், இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகிறோம் என்றும் தெரிவித்தனர்.