தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சட்டவிரோதமாக கடத்த முயன்ற 3 டன் மரங்கள் பறிமுதல்

பவானிசாகர் வனத்தில் சட்டவிரோதமாக மூன்று டன் மரங்களை வெட்டி, கடத்தலுக்குத் தயாராகப் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் பதுக்கிவைத்திருந்ததைக் கண்டுபிடித்த பொதுப்பணித் துறை அலுவலர்கள் அவற்றைப் பறிமுதல்செய்தனர்.

3 tons of trees seized at Sathyamangalam forest, ஈரோடு சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் 3 டன் மரங்கள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள்

By

Published : Nov 28, 2021, 8:00 AM IST

ஈரோடு:பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் பொதுப்பணித் துறையின் நீர் ஆதாரத் துறை பணியாளர்கள் மணல் கடத்தல், பவானி ஆற்றில் நீர் திருடுதல் போன்றவற்றைத் தடுக்க தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது, அணை பகுதியை ஒட்டியுள்ள புங்கார் வனத்தில் அணைக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் மூன்று டன் அளவில் விலை உயர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு, கடத்தலுக்குத் தயாரான நிலையில் பதுக்கிவைத்திருந்தை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.

வனத் துறையினருக்குத் தொடர்புள்ளதா?

பறிமுதல்செய்யப்பட்ட மரங்கள்

இது குறித்து பொதுப்பணித் துறையினர் விசாரித்ததில், வனப்பகுதியில் மரங்களை வெட்டிக் கொண்டுவந்து புங்கார் வழியாகக் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, பதுக்கி வைத்திருந்த மூன்று டன் மரங்களை பொதுப்பணித் துறையினர் பறிமுதல் செய்தனர்.

காராட்சிக்கொரை வனச் சோதனைச்சாவடி அருகே மரம் வெட்டி பதுக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொடர்ந்து நடந்துவந்த இந்த மரம் கடத்தல் சம்பவத்தில் வனத் துறை பணியாளர்களுக்குத் தொடர்பு உள்ளதா எனப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள்

ABOUT THE AUTHOR

...view details