கரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான படுக்கையின் தேவையும் அதிகமாக உள்ளது.
ரூ. 10 லட்சம் மதிப்புள்ள படுக்கைகள்: அரசு மருத்துவமனைக்கு அளித்த தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர்
வேலூர்: 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐசியூவில் பயன்படுத்தப்படும் படுக்கைகளை வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் இலவசமாக வழங்கினர்.
10 லட்சம் மதிப்பிலான படுக்கைகள் வழங்கிய சங்கத்தினர்
இதனைக் கருத்தில்கொண்டு வேலூர் மாநகரத் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முதற்கட்டமாக சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில், கரோனா நோயாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய படுக்கைகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பார்த்திபன் முன்னிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கியுள்ளனர்.