தமிழ்நாடு

tamil nadu

வாக்குப்பதிவில் ஆள்மாறாட்ட புகார் வந்தால் மறுதேர்தல்!

By

Published : Feb 27, 2021, 7:26 PM IST

வேலூர்: தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்து வாக்களித்ததாக புகார் வந்தால் குறிப்பிட்ட மையத்தில் மறுதேர்தல் நடத்தப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

vellore collector
vellore collector

சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடத்துவது குறித்து, அனைத்துக்கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் சண்முகசுந்தம், காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், ”வேலூர் மாவட்டத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 12 லட்சத்து 64 ஆயிரத்து 88 பேர். 1,301 வாக்குச்சாவடிகளும், 482 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் 15 இடங்களில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள இடங்களுக்கு 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி மனு கொடுக்க வேண்டும். முக்கிய தலைவர்கள் வந்தால், அவர்களுக்கான ஹெலிபேட் உள்ளிட்டவைக்கு 20 நாட்களுக்கு முன் அனுமதி கோர வேண்டும்.

ஆள்மாறாட்டம் செய்து ஓட்டு போட்டதாக புகார் வந்தால், அந்த பூத்துக்கு மறு தேர்தல் நடத்தப்படும். வாக்களிக்க வழங்கப்படும் ஓட்டர்ஸ் சிலிப்பை வைத்து மட்டும் ஓட்டுப் போட முடியாது. வாக்காளர் அடையாள அட்டையோ, தேர்தல் ஆணைய அனுமதி அட்டையோ கட்டாயம் வேண்டும். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 நிலைய கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்படும். தேர்தலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: குடியரசு தலைவர் வேலூர் வருகை: ஹெலிபேட் அமைப்பதற்கான ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details