தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேலூர் பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க ஆட்சியர் உத்தரவு!

லத்தேரி பட்டாசுக்கடை விபத்தில் சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு மாத உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

By

Published : Apr 20, 2021, 10:51 PM IST

monthly stipend for the family who died in vellore firework accident , வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
monthly stipend for the family who died in vellore firework accident

வேலூர்: கடந்த ஞாயிற்றுகிழமை (ஏப்.18) வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள மோகன் என்பவரின் பட்டாசுக்கடையில், வாடிக்கையாளருக்கு பட்டாசை வெடித்து காட்டும் போது, ஏற்பட்ட விபத்தில் மோகன்(62), அவரது பேரக்குழந்தைகள் தனுஜ்(8), தேஜஸ்(6) ஆகிய மூவரும் உடல்கருகி உயிரிழந்தனர்.

இதனையடுத்து பட்டாசுக்கடைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து பட்டாசுக் கடை உரிமையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், தீயணைப்பு துறை, மின்வாரியம், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று (ஏப். 20) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர், "உயர்மின் அழுத்த கம்பி செல்லக்கூடிய பாதைக்கு கீழ் பட்டாசுக் கடை வைக்க கூடாது. தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை செல்ல முடியாத இடங்களில் உள்ள பட்டாசு கடைகளுக்கு உரிமம் நீட்டிக்க கூடாது. விதிகளுக்கு உட்பட்டு மாற்று இடத்தில் கடையை மாற்றிய பிறகே உரிமம் வழங்க வேண்டும். அதேபோல் வரும் 15 நாட்களுக்குள் உரிமத்தை புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

லத்தேரி பட்டாசுக்கடை விபத்தில் உயிரிழந்த மோகனின் மனைவிக்கு உடனடியாக மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கே.வி.குப்பம் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழப்பு? வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கை அளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details