தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 20, 2019, 10:21 PM IST

ETV Bharat / city

மேம்பால வசதி இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி சடலத்தை எடுத்துச் சென்ற மக்கள்!

வேலூர்: சுடுகாட்டிற்கு செல்ல மேம்பால வசதி இல்லாததால் கானாறு தண்ணீரில் நடந்தபடி சடலத்தை எடுத்துச் செல்லும் அவலநிலை தொடர்ந்து நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

vellore people carrying deadbodies through river

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே சேர்பாடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால், பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கானாறு வழியாக ஆபத்தான முறையில் சடலத்தை எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை நீடித்துவருகிறது

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கருப்பாயி அம்மாள் என்பவர் இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். தற்போது வேலூரில் தொடர் மழை பெய்து வருவதால் அந்த கானாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்று கொண்டிருக்கிறது. அதனைப் பொருட்படுத்தாமல், இன்று ஆற்று வழியாக உயிரிழந்த கருப்பாயி அம்மாளின் சடலத்தை அப்பகுதியினர் நீச்சல் அடித்தபடியே தோளில் சுமந்து சுடுகாட்டிற்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை எடுத்துச் சென்றனர் .

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சுடுகாடு செல்ல வசதியாக இருக்கும் கானாறு வழியாக மேம்பாலம் அமைத்து தரும்படி பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும், அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காததால் தற்போது மூதாட்டியின் சடலத்தை ஆற்று தண்ணீரில் சுமந்தபடி எடுத்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

வேலூரில் பாலம் வசதி இல்லாததால், ஆற்றில் இறங்கி சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம்

மேலும் படிக்க

இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ள ரூ.100 போதும்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details