தமிழ்நாடு

tamil nadu

பாதுகாப்பு உடையின்றி கரோனா நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்!

By

Published : Jan 6, 2022, 6:08 PM IST

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், வேலூரில் உள்ள பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார்.

பாதுகாப்பு உடை இன்றி கரோனா நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்
பாதுகாப்பு உடை இன்றி கரோனா நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

வேலூர்:தமிழ்நாட்டில் தற்போது கரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து நேற்று (ஜனவரி 5) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநிலமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்தும் ஏனைய நாள்களில் இரவு நேர ஊரடங்கு அறிவித்தும் சில கட்டுப்பாடுகள் விதித்தும் உத்தரவிட்டிருந்தார்.

வேலூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 6) வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வேலூரில் உள்ள பென்டன்ட் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

பாதுகாப்பு உடையின்றி கரோனா நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

கரோனா நோயாளிகளுக்காகத் தயார்செய்யப்பட்டுள்ள படுக்கைகள், அவர்களுக்கான அறைகள் ஆகியவற்றை ஆய்வுசெய்தார். மேலும் கரோனா நோயாளிகளின் அறைக்கு நேரில் சென்று பாதுகாப்பு உடையின்றி நோயாளிகளுக்கான குறைகளையும், நிறைகளையும் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க:கோயில்களுக்குச் சேர வேண்டிய குத்தகை, வாடகையை உடனே வசூலிக்க உத்தரவு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details