வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த எஸ்.ஏ. ராமன் சேலத்திற்கு மாற்றப்பட்டதால், சென்னை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் சேலத்திற்கு மாற்றம்!
வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், வேலூர் மாவட்ட ஆட்சியராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.ஏ. ராமன்
தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ராமன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வேலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்துள்ளார். ஏற்கனவே இவர் மாவட்ட வருவாய் அலுவலர், ஆவின் இணை இயக்குநர், முதலமைச்சர் அலுவலக துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து, பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
Last Updated : Jun 28, 2019, 1:23 PM IST