தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 49 லட்சம் மதிப்பிலான 971 கிராம் தங்கத்தை பேஸ்ட் முறையில் கடத்திவந்த நபரை சுங்கத்துறை அலுவலர்கள் கைதுசெய்தனர்.

By

Published : Dec 19, 2020, 9:41 AM IST

airport
airport

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்திற்கு மீட்பு விமானங்கள் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்படும் மீட்பு விமானங்களில் வருபவர்கள் தங்கத்தைக் கடத்திவருவது தொடர்கதையாக இருந்துவருகிறது.

இதனையறிந்த சுங்கத் துறை அலுவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி தங்கத்தைப் பறிமுதல் செய்துவருகின்றனர். இந்த வகையில் துபாயிலிருந்து திருச்சி வந்த விமான பயணிகளைச் சுங்கத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த யாழ்வேந்தன் (23) என்ற பயணி தங்கம் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல்செய்தனர். அப்போது அவர் கொண்டுவந்த பேஸ்ட் வடிவிலான தங்கத்தைப் பிரித்து எடுத்தபோது 971 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது.

இதனைப் பறிமுதல்செய்த சுங்கத் துறை அலுவலர்கள் யாழ்வேந்தன் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதன் மதிப்பு ரூ.49.64 லட்சம் என அலவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details