தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சியில் தீக்குளிக்கு முயன்ற இளம்பெண்...காதலனைக்கைது செய்த போலீஸார்!

திருச்சியில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரது காதலனைக் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 9, 2022, 1:46 PM IST

திருச்சி வையம்பட்டி அருகே சரளப்பட்டியைச்சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் பவித்ரா(25). இவர் தனது பக்கத்து வீட்டைச்சேர்ந்த தேவராஜன் மகன் தமிழரசன்(22) என்பவருடன் திருப்பூரிலுள்ள ஒரு பனியன் கம்பெனியில் ஒன்றாக வேலை செய்தபோது 4 வருடமாக, காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவ்வப்போது இருவரும் தனிமையில் உல்லாசமாகவும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னைத்திருமணம் செய்யுமாறு தமிழரசனிடம் பவித்ரா கேட்டதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால், மனமுடைந்த பவித்ரா தனது பெற்றோருடன் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2ஆம் தேதி தமிழரசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று (அக்.8) இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பால கிருத்திகா, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் தமிழரசனிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது பவித்ரா திடீரென தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றியபடி தீக்குளிக்க முயன்றார்.

அங்கு விரைந்த போக்குவரத்து காவலர்கள் அப்பெண்ணை தடுத்து, மறியலில் ஈடுபட முயன்ற அவரது உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இவ்வாறு இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

இதையும் படிங்க: பாத்திரத்தினுள் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details