தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோர விபத்து
கோர விபத்து

By

Published : May 9, 2022, 5:04 PM IST

மணப்பாறை அடுத்த ஆசாத் ரோடு என்ற இடத்தில் கொடைக்கானலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சத்தம் கேட்டு உடனே ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சென்னை மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(34) உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோர விபத்து

இதனையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செஞ்சியைச் சேர்ந்த ஏழுமலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கோர விபத்து ஓட்டுநர் மது போதையில் காரை அதிவேகமாக இயக்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தெலங்கானா ஆணவப் படுகொலை, காத்திருந்து கொன்றோம்... பகீர் வாக்குமூலம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details