தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெயிண்டர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்... குற்றவாளியின் தாய் விடுவிப்பு...

கரூர் பெயிண்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

4-sentenced-to-life-imprisonment-in-karur-painter-murder-case
4-sentenced-to-life-imprisonment-in-karur-painter-murder-case

By

Published : Apr 20, 2022, 10:06 AM IST

கரூர் மாவட்டம் நெரூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன், சுப்பிரமணி. இருவரும் சகோதரர்கள். இதில் சீனிவாசன் மகன் புலிக்குட்டி என்கிற பெயிண்டர் பாஸ்கருக்கும் (34), சுப்பிரமணி மகன் சரவணனுக்கும் (30) இடையே மரம் வெட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு சரவணன் (30), அவரது தாய் சுசீலா (55), நண்பர்கள் பாவாடை என்கிற பாலசுப்பிரமணியன் (34), ஜெயபால் (33), ஜீவா (27) ஆகிய 5 பேர் திட்டமிட்டு பெயிண்டர் பாஸ்கரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுதொடர்பாக வாங்கல் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று (ஏப். 19) நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், சரவணன், பாலசுப்பிரமணியன், ஜெயபால், ஜீவா ஆகிய 4 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. அதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும். அத்துடன் போதிய சாட்சியங்கள் இல்லாததால் சரவணணின் தாய் சுசீலாவை வழக்கில் இருந்து விடுவிப்படுகிறார் என உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:பக்கிங்ஹாம் கால்வாயை அழகுபடுத்தும்போது நகரம் அழகாகும்

ABOUT THE AUTHOR

...view details