குடிமங்களம் வேலப்பநாயகனூர் பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கோழிப்பன்னைகள் உள்ளன. ஒரு சில கோழிப்பண்ணைகளில் இறந்து போன கோழிகளைச் சுகாதார முறைப்படி அழிக்காமல் குளக்கரைகளில் வீசி விட்டுச் செல்கின்றனர். இதனைத் தின்னும் நாய்கள் வெறிபிடித்தது போல் சுற்ற தொடங்கிப் பார்ப்பவரையெல்லாம் கடிக்கின்றன.
வெறிநாய் கடித்து 18 பேர் படுகாயம்: மருத்துவமனையில் சிகிச்சை!
திருப்பூர்: உடுமலை அருகே குடிமங்கலம் வேலப்ப நாயக்கனூரில் வெறிநாய் கடித்து 18 பேர் படுகாயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வேலப்ப நாயக்கனூரைச் சார்ந்த குப்புசாமி, பிரவின் ஆறுமுகம், மாரிமுத்து உட்பட 18க்கும் மேற்பட்டோரை வெறி நாய் ஒன்று கடித்ததால் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் தனியார் மருத்துவமனையிலும் படுகாயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அதிக அளவில் வெறி நாய்கள் கிராமப் பகுதியில் சுற்றிவருவதால் பொதுமக்களைக் கடிக்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அலுவலர்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.