இந்திய கடல்சார் துறையில் உள்ள உலகளாவிய முதலீட்டு வாய்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் இந்திய அரசின், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில், இந்திய கடல்சார் மாநாடு இன்று முதல் 4 ஆம் தேதி வரை நடக்கிறது. இம்மாநாடு, உலகத்திறம் வாய்ந்த துறைமுகங்களை வளர்ப்பது, கடல்சார் வணிகத்திற்கு நிதி வழங்குவது, துறைமுகம் சார்ந்த தொழில் மயமாக்கும் பொது சரக்குகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.27 ஆயிரம் கோடியில் வ.உ.சி. துறைமுகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தூத்துக்குடி: இந்திய கடல்சார் மாநாட்டை முன்னிட்டு ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 45 நிறுவனங்களுடன் வ.உ.சி. துறைமுகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மாநாட்டின் ஒரு பகுதியாக அனைத்து இந்திய துறைமுகங்களும் தொழில் முனைவோர்களுடனும், கடல்சார் வணிக பங்குதாரர்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கின்றனர். அதன்படி, ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 45 நிறுவனங்களுடன் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. குறிப்பாக வ.உ.சி துறைமுக ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்து, அண்ட்பெர்ப் துறைமுகங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.20 ஆயிரம் கோடியிலும், ரூ.2 ஆயிரத்து 468 கோடி மதிப்பில் எல்.என்.ஜி. டெர்மினல் மற்றும் பங்கர் அமைப்பதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் கடைகளை ஒரு வாரத்திற்குள் திறக்க உத்தரவு!