தூத்துக்குடி: கோவில்பட்டி தாலுகாவுக்கு உள்பட்ட எட்டயபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக அரசின் அவலங்களை எடுத்துக்கூறி திமுகவிற்கு வாக்குகளை சேகரித்தார்.
இதைத் தொடர்ந்து பிற்பகலில் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பட்டாண்டி விளை பகுதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், அதிமுக தலைமையில் அமைந்த இந்த 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
இந்த பத்தாண்டு கால ஆட்சியில் அரசின் நலத் திட்டங்களால் மக்களுக்கு கிடைக்காத பலன்களை சரியாக செய்து கொடுக்க கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாள்களில் மக்களின் குறைகளை தீர்த்து வைப்பேன் என்ற உறுதிமொழியை நான் கூறியுள்ளேன்.
அணையும் விளக்கு பிரகாசமாக வெளிச்சம் தருவது போல, அதிமுக ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். அதைக் காபாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் மக்களை ஏமாற்றுவதற்காக கடைசி நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள நகை கடனை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டுறவு கடன்களை முதலமைச்சர் கே பழனிச்சாமி அரசு ரத்து செய்யவில்லை. தேர்தல் சுயலாபத்திற்காக கூட்டுறவு கடன்களை ரத்து செய்துள்ளனர் என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் உரை இதுபோல் ராஜிவ் கொலை வழக்கு எழுவர் விடுதலையிலும், நீட்தேர்வு விவகாரத்திலும் உண்மையை மறைத்து அதிமுக அரசு நித்தமும் நாடகமாடி வருகிறது” என்று தெரிவித்தார்.