தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விவசாய பயிர்க்கடன் வழங்குவதில் மத்திய கூட்டுறவு வங்கி முதன்மயானது - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழாவில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

bank function

By

Published : Aug 20, 2019, 5:14 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பொறுப்பேற்ற சுதாகர், துணைத்தலைவர் கணேச பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு அதிக பயிர்க்கடன் வழங்குவதில் முதன்மையானதாக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம், தொடர்ந்து அரசு மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களான பயிர்க்கடன், விவசாயக்கடன் உள்ளிட்டவற்றை வழங்கி சிறப்பாகச் செயல்படுவதற்கு அரசு அலுவலர்கள, பணியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என கூறினார்.

புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா

இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்பட மேலும் பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details