தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 28, 2020, 7:47 AM IST

ETV Bharat / city

ஆதரவற்றோருக்கு நகராட்சி சார்பில் மூன்று வேலை உணவு

தூத்துக்குடி: உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு நகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

அனைத்து சாலைகளிலும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
அனைத்து சாலைகளிலும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அத்தியாவசியமான பொருட்கள் விநியோகம் செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

பொதுமக்கள் அதீக கூட்டமாக மார்கெட் பகுதிக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றதால், மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை உள்ளே அனுமதிக்காமல் கூட்ட நெரிசலை போலீசார் கட்டுப்படுத்தினர்.

மேலும் சாலையின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதித்தனர். மேலும் முகக்கவசம் அணிந்து செல்பவர்கள் மட்டுமே காய்கறிகளை வாங்குவதற்கு மார்க்கெட்டில் அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து சாலைகளிலும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி, ஆதரவற்றோர் 50க்கும் மேற்ப்பட்டோருக்கு மூன்று வேலை உணவு

அதுமட்டுமின்றி, கோவில்பட்டி நகர் முழுவதும் உள்ள சாலைகளில் நகராட்சி ஊழியர்கள், நகராட்சி வாகனத்தில் கிருமி நாசினி தெளித்தனர். மேலும், நகரில் உணவின்றி தவித்த ஆதரவற்றோர் 50க்கும் மேற்ப்பட்டோருக்கு நகராட்சி சார்பில் ஊழியர்கள் மூன்று வேலையும் உணவு வழங்கினர்.

For All Latest Updates

TAGGED:

corona 144

ABOUT THE AUTHOR

...view details