தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதியன்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுரேஷ் விஸ்வநாத் உத்தரவின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது தொடர்பாக பொதுமக்களுக்கும் வழக்குதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திக்குளம் உள்ளிட்ட தாலுகா நீதிமன்றங்கள் உள்ள பகுதிகளில் தேசிய மக்கள் நீதிமன்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பொதுமக்களிடம் சென்று துண்டுப்பிரதிகள் கொடுக்கும் பணி தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தலைமையேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இப்பேரணியில் மகிளா நீதிமன்ற நீதிபதி குமார் சரவணன், இரண்டாவது மாவட்ட கூடுதல் நீதிபதி கௌதமன், முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் ஹேமா, சார்பு நீதிபதிகள் சாமுவேல் பெஞ்சமின், மாரீஸ்வரி, பயிற்சி நீதிபதிகள், நீதித் துறை ஊழியர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வருகின்ற 14.09.2019 அன்று கூடும் தேசிய மக்கள் நீதிமன்றம் மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரதிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பேரணியானது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கி காய்கறி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், மாநராட்சி அலுவலகம் வழியாகச் சென்று பின்னர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தை வந்தடைந்தது.