தென்மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஏழு சமூக பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பைக் கண்டித்து நெல்லையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் இன்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
முப்பாட்டன் காலத்திலிருந்தே தங்கள் சமூகத்தை மட்டுமே வேளாளர் என்று அழைத்து வருவதாகவும் இந்த நிலையில் திடீரென பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் இவ்வாறு அழைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிடாததால் கைது செய்யப்பட்டனர்.