திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் இன்று (ஏப். 16) பரிசோதனை மேற்கொண்டபோது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அத்துடன் அவர் பணிபுரிந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கு மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது, கரோனா தொற்று மிக வேகமாக பரவுகிறது. நாள்தோறும் சராசரியாக 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.