திருநெல்வேலி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாட்டின் மிக மூத்த ஊராட்சி மன்றத் தலைவியான பெருமாத்தாள்(91) தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை, வேளாண்துறை, மக்களைத்தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பஞ்சாயத்து வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு, இது குறித்த விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நம்ம ஊரு சூப்பர், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ள பாரம்பரிய விதைகள் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
91 வயதில் கலகலப்பாக கிராம சபைக்கூட்டத்தை நடத்திய ஊராட்சி மன்றத்தலைவி; நெல்லையில் ருசிகரம் இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் சிவந்திபட்டி ஊராட்சி பகுதியில் மின்விளக்குகள் அமைக்கக்கோரியும், புதிய சாலைகள் அமைக்கக்கோரியும் கருத்து தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சாலைகளில் இருக்கக்கூடிய கருவேல மரங்களை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிராக கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்!