தென்காசி: இலஞ்சி அருகே ஓட்டுநராக வேலை பார்த்துவந்தவர் சின்ன இசக்கி. இவருக்கு 15 வயதில் ஒரு பையனும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவருடைய மனைவி தென்காசியில் உள்ள ஒரு பாத்திர கடையில் வேலை செய்துவருகிறார்.
இவருடைய வீட்டில் கட்டட வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இவரது வீட்டில் கான்கீரிட் பணி நடைபெற இருந்த நிலையில், காலை அவர் வீட்டின் முன்பே சின்ன இசக்கி கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்த நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் காவல் துறையினர் விரைந்து வந்து சின்ன இசக்கி உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த சின்ன இசக்கி ஏற்கனவே, கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் இறப்புகான காரணம் குறித்து குற்றாலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் மீதான 18 குற்றவியல் வழக்குகள் ரத்து