தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லையில் சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமை கொறடா கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

நெல்லை 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவு
நெல்லை 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவு

By

Published : Mar 10, 2022, 5:29 PM IST

தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு மாவட்ட வாரியாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் பணியை நேற்று முன் தினம்(மார்ச்.08) தொடங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற மனுக்கள் குழு தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2 நாள் பயணமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான ஆய்வு பணியினை மனுக்கள் குழுவினர் மேற்கொண்டனர். நெல்லை மாவட்டத்திலுள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 263 மனுக்கள் மீது அலுவலர்கள் ஆய்வு செய்து 74 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு தலைமை கொறடா கோவி செழியன், தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அலுவலர்களுக்கு உத்தரவு

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இரண்டு தினங்களாக நடந்த மனுக்கள் மீதான ஆய்வு கூட்டத்தில் பொது மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெறப்பட்ட 263 மனுக்களில் 74 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டு 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 7 மனுக்களை மீண்டும் மறு ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் சமுதாய நலக்கூடம் அமைத்தல், கழிப்பறை,சாலை மேம்பாடு உள்ளிட்டவைகளில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்ய மனுக்கள் குழு அலுவலர்களுக்கு பரிந்துரைத்துள்ளது. பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து பெறப்பட்ட மனுக்களை மாதம் 2 மாவட்டம் வீதம் ஆய்வு செய்ய மனுக்கள் குழு திட்டமிட்டுள்ளது. அடுத்த கட்டமாக கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களிலும் அதனை தொடர்ந்து கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அலுவலர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கவும் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:வெற்றி எங்களுக்கு ஜிலேபி உங்களுக்கு... பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆர்ப்பரிப்பு...

ABOUT THE AUTHOR

...view details