தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெள்ளத்தில் மூழ்கிய குடிநீரேற்று கிணறுகள் - மாற்று வழியில் குடிநீர் விநியோகம்!

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஆற்றிலுள்ள குடிநீரேற்று கிணறுகளும், மின் மோட்டார்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு மாற்று வழியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

By

Published : Jan 14, 2021, 7:31 PM IST

மாற்று வழியில் குடிநீர் விநியோகம்
மாற்று வழியில் குடிநீர் விநியோகம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பல ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக, ஆற்றங்கரையோரம் உள்ள குடிநீர் கிணறுகள் மற்றும் மின் மோட்டார்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் நெல்லை மாநகர மக்களுக்கு ஜன.14 முதல் 16ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன் நேற்று (ஜனவரி 13) அறிவித்திருந்தார். மழை காரணமாக ஏற்கனவே சரிவர குடிநீர் கிடைக்காத சூழலில், முற்றிலும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், நெல்லை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்க மாநகராட்சி மாற்று ஏற்பாடு செய்துள்ளது. போர் வாட்டர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 40 லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வழக்கமான குடிநீர் இணைப்புகள் சரியாகும் வரை இந்த மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்த ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details