தமிழ்நாடு

tamil nadu

'குழந்தைகள் பாதுகாப்பு' விழிப்புணர்வு மாரத்தான்! பரிசு வழங்கிய ஜி.வி. பிரகாஷ்

By

Published : Jun 23, 2019, 11:51 AM IST

சேலம்: குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான்..!

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தனியார் அமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி நடந்தது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதனைச் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் தங்கதுரை தொடங்கிவைத்தார்.

சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் முக்கிய வீதி வழியாகச் சென்று அஸ்தம்பட்டி அருகிலிருந்து திரும்பி, மீண்டும் காந்தி மைதானத்தை அடைந்தது. வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான்..!

முதல் பரிசு மிக்கி ஹவுஸ் என்ற மாணவனுக்கும், இரண்டாம் பரிசு அமன் வேலுக்கும், மூன்றாம் பரிசு பீட்டர் என்பவருக்கும் கிடைத்தது. போட்டியில் பங்கேற்ற ஒரு சிலருக்கு மட்டும் நினைவுப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details