தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார்

சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்

By

Published : Dec 2, 2021, 10:16 PM IST

சேலம்:மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரையின் மகள் நம்ரதாவின் திருமணம் சேலத்தில் நடைபெற்றது.

இந்தத் திருமண விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையேற்று மணமக்கள் நம்ரதா - கௌதம் ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினர்.

திருமண விழாவில் கலந்து கொண்ட பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார்

அவர்கள் அரசியல் வியாபாரிகள்

அப்போது அவர் கூறுகையில், "அதிமுகவிலிருந்து வேறு கட்சிக்குச் செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல, அவர்கள் அரசியல் வியாபாரிகள்.

கொக்கு போல இரையைத் தேடுபவர்களால் அதிமுகவிற்கு ஒருபோதும் பாதிப்பு கிடையாது. அதிமுக அசைக்க முடியாத தொண்டர்களைக் கொண்ட இயக்கம்.

ஜனநாயக ரீதியில்தான் உள்கட்சி தேர்தல்

மேலும், விதிமுறை அடிப்படையில் ஜனநாயக ரீதியில்தான் உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. எம்ஜிஆர்., ஜெயலலிதா காலத்திலிருந்தே பொதுச்செயலாளர் தேர்வுக்குப் பிறகுதான் உள்கட்சி தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதிமுகவுக்கு ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர்.

சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். இந்தத் திருமண விழாவில் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக அமைப்புச் செயலாளர்கள் பொன்னையன், செம்மலை, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், திண்டுகல் சீனிவாசன், உடுமலை ராமகிருஷ்ணன், எஸ்பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

'ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிமுகவின் இரு கண்கள்' - முன்னாள் அமைச்சர் பொன்னையன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details