சேலம்:அதிமுகவின் மூத்தத் தலைவர் தம்பிதுரை இல்லத் திருமண விழா சேலத்தில் இன்று (டிச.2) நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் வாழ்த்தினர்.
இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அதிமுகவின் மூத்தத் தலைவரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான, முன்னாள் அமைச்சர் பொன்னையன், "சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட சசிகலா கிடையாது, ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டிலிருந்தே ஒதுக்கி வைத்திருந்தார்.
ஒற்றைத் தலைமை: தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை
மேலும், அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் சட்ட விதிகளின் படி நடைபெறும், ஈபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர்.